×

புதன்சந்தையில் பெய்த மழையால் வீட்டின் மீது விழுந்த புளிய மரம்

சேந்தமங்கலம், செப்.26: புதன்சந்தையில், நேற்று மதியம் பெய்த மழையால் வீட்டின் மீது புளிய மரம் முறிந்து விழுந்தது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை செல்லபப்பம்பட்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் நேற்று புதன்கிழமை என்பதால், புதன்சந்தையில் காய்கறி சந்தை கூடுவது வழக்கம். நேற்று மழையின் காரணமாக சந்தை வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க பெரும் சிரமமப்பட்டனர். இதில் செல்லப்பம்பட்டியில் அரசு வங்கி எதிரே புளிய மரம் ஒன்று அருகில் இருந்த வீடு மற்றும் பட்டரையின் மீது வேரோடு முறிந்து விழுந்தது. இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நீண்ட நாட்களாகவே இந்த மரம் முறிந்து விழும் நிலையில் இருந்தது. இதுபற்றி நெடுஞ்சாலை துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்