×

காரிமங்கலம் -பாலக்கோடு சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

காரிமங்கலம், செப்.26: காரிமங்கலத்தில் கடைவீதி, ராமசாமி கோயில், மொரப்பூர்ரோடு, பாலக்கோடு ரோடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. பாலக்கோடு ரோட்டில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வங்கி, அரசுப் பள்ளி, அரசு அலுவலகங்கள் போன்றவை அமைந்துள்ளது. பல வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன முக்கிய சாலையான இப்பகுதியில் வங்கி மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து, இருசக்கர வாகனங்கள் வங்கி ஏடிஎம் முன்பு நிறுத்தப்படுவதாலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளன

Tags : Karimamangalam-Palakkad ,road ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...