×

லால்குடி அருகே தூர்வாரிய குளத்தில் கழிவுநீர் கலப்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

லால்குடி, செப்.26: லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் ஊராட்சி மேலவாளை கிராமத்தில் தூர்வாரப்பட்ட குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லால்குடி ஒன்றியம் இடையாற்றுமங்கலம் ஊராட்சியில் மேலவாளை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் செலவில் குளம் தூர்வாரப்பட்டது. இக்கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர் குழு சார்பில் குளத்தின் கரைகளில் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் குளத்தின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் குளத்தின் எல்லைகளை அளந்து நான்கெல்லை காட்டவும், அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்ட நிலையில் குளத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள கழிநீரை குளத்தில் விடுவதால் மீண்டும் குளம் மாசு அடைந்து கரைகள் உடைந்து காணப்படுகிறது. குளம் முற்றிலும் சேதமடைவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Lalgudi ,drywall pond ,
× RELATED லாரி மீது வேன் மோதி 20 பேர் படுகாயம்