×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு காவேரி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருச்சி, மே14: திருச்சி காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 17வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி அக்ஷிதா 496 மதிப்பெண்களும், வசுந்த்ராதேவி 488 மதிப்பெண்களும், நபிஹா 486 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.

கணக்குத் தேர்வில் இரண்டு மாணவிகளும், அறிவியலில் தலா ஒருவரும், சமூக அறிவியலில் தலா ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வு எழுதிய 50 மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 33 மாணவிகள் 80 சதவீத அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளி தலைவர் முரளிதரன், செயலாளர் கோபிநாத், முதல்வர் கல்யாணி, துணைமுதல்வர் ஆரோக்கியமேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வு காவேரி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kaveri Matric School ,Trichy ,Cauvery Matriculation High School ,Akshita ,Vasundratevi ,Nabiha ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...