×

சுண்ணாம்பாற்றில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள், நண்டுகள்

புதுச்சேரி, செப். 26:    புதுவை சுண்ணாம்பாற்றில் செப்டிங் டேங்க் கழிவுகள் ெகாட்டப்பட்டதால் மீன்கள், நண்டுகள் நேற்று செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை நோணங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் இருந்து அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் (பிடிடிசி) சார்பில் பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம்பேர் இந்த படகுகளில் பாரடைஸ் பீச்சுக்கு சென்று வருகின்றனர். இதனால் படகு குழாமிற்கு ஆண்டுதோறும் வருவாய் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் கடலும், ஆறும் சேரும் இடமான முகத்துவாரம் வரையிலும் ஆற்றின் கரையோரம் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இந்த மாங்குரோவ் காடுகளானது கடல்அரிப்பு, கடல்அலை சீற்றத்தை தடுப்பதுடன், நண்டு, இறால் இனப்பெருக்கத்துக்கும் உதவுகிறது.

ஆனால், இத்தகைய சிறப்புவாய்ந்த சுண்ணாம்பாற்றில் கடந்த சில நாட்களாக சமூக விரோதிகள் செப்டிக் டேங்க் கழிவுகளை லாரிகளில் கொண்டுவந்து கொட்டிச் செல்கின்றனர். இதனால் சுண்ணாம்பாறு மற்றும் மாங்குரோவ் காடுகளின் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியே கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை கொட்டியதால் மீன்கள், நண்டுகள் செத்து கரையோம் நேற்று மிதந்தன. இதே நிலை தொடர்ந்தால், மாங்குரோவ் காடுகள், அதனை சார்ந்த வாழும் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுண்ணாம்பாற்றில் கழிவுகள் கொட்டப்படாமல் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...