ஒகளூர் பொதுமக்கள் மனு விவசாயிகளின் நிலத்தை மீட்டு தரக்கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப்.26: சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளு க்கு அந்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி பெரம்பலூரில் விடுதலை சிறு த்தைகள்கட்சிசார்பில்ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.பெரம்பலூர் பழையபஸ்டாண்டு காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை வகி த்தார். விவசாய தொழிலா ளர் விடுதலை இயக்க மாநி லச் செயலாளர் வீரசெங் கோலன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் கடந்த 12 ஆண்டுக ளுக்கு முன் விவசாயிகளி டம் கையகப்படுத்திய 3 ஆ யிரம் ஏக்கர் நிலத்தில் சிற ப்புப் பொருளாதார மண்ட லத்தை உடனே அமைக்க வேண்டும். இல்லையெனில், கையகப்படுத்திய நிலத்தைமீட்டுதமிழகஅரசு மீண்டும் அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட விவசாயிக ளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளி ட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது.மண்டல அமைப்பு செயலா ளர் கிட்டு, மண்டல செயலா ளர் திருமாறன், நகர செய லாளர் தங்கசண்முகசுந்த ரம் கலந்து கொண்டனர்.


Tags : Demonstration ,Reclaiming Farmers' Lands ,
× RELATED கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்