×

நீடாமங்கலம் பகுதியில் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

நீடாமங்கலம், செப்.26:  தஞ்சை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் நீடாமங்கலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 3 மாதம் தங்கி கடந்த பல்வேறு பயிற்சிகளையும் கள அனுபவங்களையும் பெற்று வருகின்றனர். வேளாண்மை தொழில் நுட்பங்கள் பற்றியும், கிராம பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், முன்னோடி விவசாயிகளை கண்டறிந்து அவர்களிடம் வேளாண் தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டும் வேளாண்மை சார்ந்த ஆடுவளர்ப்பு, மீன் வளப்பு, கோழிவளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்களை கேட்டறிந்து வருகின்றனர்.நேற்றுமுன்தினம் நகர் கிராமத்திற்கு சென்று அங்கு இயந்திர உழவு, பயிர்களை உடுத்தல் மற்றும் நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டனர்.  நேற்று நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள முன்னோடி விவசாயிகளை சந்தித்து விவசாய தொழில் நுட்பங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.


Tags : Tanjana Agricultural College ,Needamangalam ,area ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில்...