×

பெரம்பலூர் வாரச்சந்தையில் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசு உற்பத்தியாகும் அபாயம்

பெரம்பலூர்,செப்.25: பெரம்பலூர் நகராட்சிக்கான செவ்வாய் வாரச்சந்தை ஏற்கனவே 2017ம்ஆண் டுவரை பெரம்பலூர் துறையூர் சாலையில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கிழக்குப் பகுதி யில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. பின்னர் அரசுத் தலைமை மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த நிலம் சுகாதா ரத் துறைக்கு வழங்கப் பட் டதால், 2ஆண்டுகளாக வட க்குமாதவி சாலையில் உழ வர் சந்தைக்கு தென்புறம் அதே இந்துசமய அறநி லையத் துறைக்குச் சொந் தமான நிலத்தில் இயங்கி வருகிறது.இந்த செவ்வாய் வாரச் சந்தை நகராட்சியின் கட்டுப் பாட்டில் வராததால் அதற் கான பராமரிப்புப்பணிகள் பற்றிக் கேட்டால் எங்களுக் குச் சம்மந்தம் இல்லையென கூறி ஒதுங்கிக் கொள்கிறார்கள். சந்தையை ஏலம் எடுத் தவர்களோ, மழைக் காலத் தில் தண்ணீர் தேங்கினால் அதனை மண்ணைக் கொ ட்டி, மேடுபடுத்தி தண்ணீர் தேங்காதிருக்க நடவடிக் கை எடுப்பதும் இல்லை. இதனால் வாரச் சந்தைக்கு நடுநடுவே உள்ளா பாதை, வரத்து வாய்க்காலைப் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழை யால் இங்கு சுமார் நான்கைந்து நாட்களாக மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் டெங்கு பாதிப் பை ஏற்படுத்தக்கூடிய சுத் தமான மழைநீரில் உற்பத் தியாகும் கொசுக்கள் கோடி க்கணக்கில் உற்பத்தியாக லாம் என்ற அபாயம் ஏற்ப ட்டுள்ளது. எனவே சம்மந்த ப்பட்ட வாரசந்தை ஏல தாரர் களோ அல்லது நகராட்சி நிர்வாகமோ, சுகாதாரத் துறையோ சுத்தப்படுத்த பெரம்பலூர் மாவட்ட நிர்வா கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூ க ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி