×

பாப்பிரெட்டிப்பட்டியில் விலை வீழ்ச்சியால் தோட்டத்தில் பறிக்காமல் விடப்பட்டுள்ள தக்காளி

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.25: பாப்பிரெட்டிப்பட்டியில் விலை வீழ்ச்சியால், தக்காளியை பறிக்காமல் விவசாயிகள் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில், சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.இதனால் பெரும்பாலான தோட்டங்களில் இருந்து தக்காளி அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி பறிப்பதற்கான கூலி அதிகமாக உள்ளது. கூலிக்கு கொடுப்பதற்கு கூட தக்காளி விற்பனையாவதில்லை. ஆகையால் அறுவடை செய்யாவிட்டால் விவசாயிகளுக்கு ஆகும் செலவு குறைகிறது. மேலும், தக்காளியை பதப்படுத்த தனி ஆலை அமைத்துத்தர வேண்டும் என்றனர்.

Tags : garden ,
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!