×

இந்திய விமானப்படையில் பயிற்றுநர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம்

தர்மபுரி, செப்.25: இந்திய விமானப் படையில் பயிற்றுநர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை கோயமுத்தூரில் நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்ட கலெக்டர்  மலர்விழி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கோயமுத்தூரில் வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை இந்திய விமானப் படையில் பயிற்றுநர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை பாரதியார் பல்கலைகழக உடற்கல்வி அரங்கில் நடக்கும் முகாமில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவு, லட்சதீவு ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆண் விண்ணப்பதார்கள் கலந்து கொள்ளலாம். கல்வி தகுதியாக இளநிலை பிரிவில் பி.ஏ.ஆங்கிலம், பி.எஸ்.சி இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், ஐ.டி, கணிப்பொறியியல், புள்ளியியல் அல்லது பிசிஏவை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பி.எட் படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் 19 ஜனவரி 1995-2000க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

முதுநிலை பிரிவில் எம்.ஏ. ஆங்கிலம், உளவியல், எம்.எஸ்.சி இயற்பியல், கணிதம், ஐ.டி, கணிப்பொறியியல், புள்ளியியல் அல்லது எம்.சிஏவை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பி.எட் படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் 19 ஜூலை 1992-2000க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வினை எதிர்கொள்வது குறித்தும், பயிற்சி விவரங்கள் மற்றும் தேர்வு விவரங்கள் குறித்தும், ஒருநாள் பயிற்சி முகாம் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், கூடுதல் தகவல்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Camp ,Instructor ,Indian Air Force ,
× RELATED விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு