×

மேடை அலங்கார தொழிலாளி தற்கொலை

புதுச்சேரி, செப். 25: புதுவை முத்தரையர்பாளையம் காந்திதிருநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் (39). திருமண மேடை அலங்கார தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அமுதா (35). ஒரு மகன், மகள் உள்ளனர். சீனுவாசன், முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தும், முதுகுவலி குணமாகவில்லை.கடந்த சில நாட்களாக வலி அதிகமானதால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். மனைவி அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் வீட்டில் சீனுவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏஎஸ்ஐ ராஜவேலு ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : stage decorator ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...