×

தீர்த்தகுளம் தூய்மைப்படுத்தும் பணி குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்

சிதம்பரம், செப். 25:  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள பழமை வாய்ந்த குளம் தூர்வாரும் பணி மக்கள் பங்களிப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் எல்லையில் உள்ள புகழ்பெற்ற தில்லைகாளியம்மன் கோயில் எதிரில் உள்ள சிவப்பிரியை தீர்த்தகுளம் சுருங்கி செடி, கொடிகள் மண்டி உபயோகமற்ற நிலையில் இருந்தது. இக்குளத்தை அண்ணாமலை பல்கலைக்கழக கல்வியியல் துறை என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் டைமிங் ஹெல்ப் தொண்டு நிறுவனம் இணைந்து நாளை (26ம் தேதி) தூய்மைப்
படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று தில்லைக்காளியம்மன் கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார், அண்ணாமலை பல்கலைக்கழக என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பேராசிரியர் தமிழ்செல்வன், டைமிங் ஹெல்ப் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags : cleaning ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை...