×

பாப்பிரெட்டிப்பட்டியில் மலையாளி பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.24: பாப்பிரெட்டிப்பட்டியில், தமிழ்நாடு ஷெட்யூல்டு ட்ரைப்(மலையாளி) பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் வரதராஜூ தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் வெள்ளையன் வரவு- செலவு அறிக்கை படித்தார். கூட்டத்தில், தமிழகத்தில் பழங்குடியினர் வாழும் பகுதியில், ஐந்தாவது அட்டவணையை பயன்படுத்தி, பழங்குடியினர் நிலங்களை பாதுகாக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, காளிமலை பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு, ஜாதி சான்று வழங்க வேண்டும்.

வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் 2006ஐ அனைத்து பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும். பழங்குடியினர் வாழும் வனப்பகுதியில், சாலை போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை பகுதியை சுற்றுலா தலமாக்குவதற்காக, அங்குள்ள பழங்குடியின மக்களை அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். மலையாளி பழங்குடியினருக்கு தடையில்லாமல் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அனைத்து ஏகலைவா பள்ளிகளிலும், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பழனி, கல்யாணசுந்தரம், காளியப்பன், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : State General Committee Meeting of Malayali Council ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா