×

தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பயணம்

புதுச்சேரி,  செப். 24: புதுவை
யில் காவல்துறையும், இளைஞர்கள் மன்றமும் இணைந்து சர்வதேச  தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு, சைக்கிள் பிரசார பயணம் நேற்று  மேற்கொண்டது. கடற்கரை காந்தி சிலை முன்பு இப்பிரசார பயணத்தை வில்லியனூர்  சப்-கலெக்டர் தஷ்வத் சவுரவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடற்கரை  சாலையில் தொடங்கிய பிரசார பயணம், ஒதியஞ்சாலை வழியாக அரியாங்குப்பம்,  தவளக்குப்பம், திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் சென்றது.  வழிநெடுகிலும் தற்கொலை தடுப்பு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்திய இளைஞர்கள் மீண்டும் கடற்கரையை வந்தடைந்து தங்களது பயணத்தை  மாலையில் நிறைவு செய்தனர்.

Tags : Suicide Prevention Day Awareness Trip ,
× RELATED ஒரே நாளில் 608 பேருக்கு தொற்று...