போக்சோ சட்டத்தில் வேன் டிரைவர் கைது

கோபால்பட்டி, செப்.20 ஒட்டன்சத்திரம் ஆசாரிபுதூரை சேர்ந்தவர் தண்டபாணி மகன் பிரகாஷ் (24). தனியார் மில் வேன் டிரைவர். இந்த மில்லில் அஞ்சுகுழிப்பட்டி படுகைகாட்டூர் பகுதியை  சேர்ந்த 16 வயது இளம்பெண் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மைனர் பெண்ணை பிரகாஷ் திருமண ஆசை காட்டி கடந்த 29ம் தேதி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சின்னதாராபுரம் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிரகாஷ் மற்றும் இளம்பெண்ணை சாணார்பட்டி காவல்நிலையத்திற்க்கு  அழைத்து வந்தனர். பிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Van ,
× RELATED பள்ளி வேன் தீப்பிடித்து 4 குழந்தைகள் கருகி பலி