×

சோலார் லைட் விற்பதாக பல இடங்களில் கைவரிசை தாயுடன் வாலிபர் கைது

சோழவந்தான், செப். 20: சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரத்தை சேர்ந்தவர் மாசாணம் (30), கூலித்தொழிலாளி. இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்த வாலிபர் ஒருவர், குறைந்த விலையில் ‘சோலார் லைட்’ விற்பதாக கூறியுள்ளார்.
அவரை வீட்டிற்குள் அழைத்து சென்று மாசாணம் பேசியுள்ளார். அப்போது அவரது கவனத்தை திசை திருப்பிய வாலிபர், அலமாரியிலிருந்த ஒரு பவுன் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்களை திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.இதில், மோதிரத்தை திருடியது சோழவந்தானை அடுத்த நெடுங்குளத்தை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், ‘மாரிமுத்து சோலார் லைட் விற்பதாக கூறி காரில் சென்று பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. சோழவந்தான் தெற்கு ரத வீதியில் விஜயானந்தம் வீட்டில் 3 பவுன் நகையும், சாலாட்சிபுரம் பழனிசாமி வீட்டில் ஒன்றரை பவுன் நகையும், மேலக்கால் பெனாசிர் வீட்டில் ஐந்தரை பவுன் நகையும் திருடியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாரிமுத்துவிடம் இருந்த 11 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மாரிமுத்துவுக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் முனியம்மாள் (59) கைது செய்யப்பட்டார்.

Tags : Plaintiff ,locations ,
× RELATED விமானங்களில் 350 மில்லி வரை...