×

ஐகோர்ட் மதுரை கிளையில் தூய்மை பணிக்கு நவீன பேட்டரி வாகனம்

மதுரை, செப். 20: ஐகோர்ட் மதுரை கிளை அதிகளவு பரப்பளவில் 3 மாடி கட்டிடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களின் தரைத்தளங்கள் அனைத்தும் கிரானைட் கற்களால் ஆனவை. இவைகளை தினசரி ஊழியர்கள் சுத்தம் செய்து வந்தனர். வேலை நேரம் தொடங்கும் முன் தரைத்தளங்களை சுத்தம் செய்யும் பணி, சவாலாக இருந்து வந்தது. இதனால், சுகாதாரப் பணி ஊழியர்கள் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில், சுகாதாரப் பணியை விரைவாக மேற்கொள்ள, பேட்டரியில் இயங்கக் கூடிய நவீன மாப்பிங் இயந்திர வாகனங்கள் இரண்டு ரூ.16.5 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது. இதேபோல், வழக்கு உத்தரவுகள் பல பக்கங்களில் இருப்பதால், அவற்றை நூலால் தைக்கும் நடைமுறையே இருந்தது. இதிலுள்ள சிரமத்தை போக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பக்கங்களாக இருந்தாலும், அவைகளை ேசர்த்து பின் செய்யும் இயந்திரமும் வாங்கப்பட்டுள்ளது.இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று மாலை ஐகோர்ட் கிளையில் நடைபெற்றது. நிர்வாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மாப்பிங் இயந்திரத்தை இயக்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வேலுமணி, பார்த்திபன், ஆனந்த் வெங்கடேஷ், எம்.சுந்தர், நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன், கோவிந்தராஜ், தாரணி, இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, பதிவாளர்கள் தேவநாதன், தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Icord Madurai Branch ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...