×

திருப்பத்தூர் அருகே பரபரப்பு நீதிபதி போன்று போலி கையெழுத்து போட்டு வாடிக்ைகயாளருக்கு சம்மன்

திருப்பத்தூர், செப்.20: திருப்பத்தூர் அருகே சார்பு நீதிமன்ற நீதிபதி போல் போலி கையெழுத்து போட்டு வாடிக்கையாளர்களுக்கு சம்மன் வழங்கிய வங்கி மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் கடந்த 14ம் தேதி திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜோலார்பேட்டை கிளை, சுந்தரம்பள்ளி, விஷமங்கலம் என 3 கிளைகளை சேர்ந்த வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அசல், வட்டியை செலுத்த நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பினர். இதையடுத்து லோக் அதாலத் தீர்ப்பாயத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குரிசிலாப்பட்டு கிளை மேலாளர் கோதண்டன் நீதிமன்றத்துக்கு தெரியாமல் வட்ட சட்டப்பணிகள் சார்பில் குரிசிலாப்பட்டு அருகே உள்ள வடுகமுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜோதிபாசு(35) என்பவருக்கு சார்பு நீதிபதி போல் போலியாக கையெழுத்து போட்டு ஒரு சம்மன் அனுப்பினார்.
 
இதனால், நேற்று முன்தினம் ஜோதிபாசு திருப்பத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் தனக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது என்று அந்த கடிதத்தை காட்டினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள் இந்த கடிதம் நீதிமன்றத்தின் மூலம் அனுப்பப்பட வில்லை. மேலும், இதுசார்பு நீதிபதியின் கையெழுத்தும் இல்லை என்றனர். பின்னர், இதுகுறித்து சார்பு நீதிபதி வேலரசு, தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்ட வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறினார். இதையடுத்து நேற்று வட்ட சட்ட பணிகள் குழு இளநிலை உதவியாளர் தினகரன், திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மதனலோகன் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள குரிசிலாப்பட்டு வங்கி மேலாளர் கோதண்டனை தேடி வருகிறார்.

Tags : Thirupathoor ,judge ,
× RELATED கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா...