×

புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

கிருஷ்ணகிரி, செப்.19:    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை கலெக்டர் பிரபாகர், நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் நகராட்சி அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டண கழிப்பிடம், இலவச கழிப்பிடம் ஆகிய இடங்களுக்கு சென்ற அவர், கழிப்பிடங்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். பின்னர், பஸ் நிலையத்தில் உள்ள பலசரக்கு கடைகளில் ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த கடைக்காரருக்கு ₹500 அபராதம் விதித்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்ய, நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், வீடுகளில் கொசுக்களை கண்டறியும் பணியாளர்களிடம், டெங்கு உற்பத்தி செய்யும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் உற்பத்தி ஆகாமலிருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றார்.


Tags : Collector ,inspection ,bus station ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...