×

சித்தமல்லி நீர்தேக்க கரையில் பனை விதைகள் நடவு பணி

தா.பழூர், செப். 19:அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் நடுவலூர் மற்றும் நாயகனைபிரியாள் தொகுப்பு கிராமத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டது. அதன்படி சித்தமல்லி நீர் தேக்கத்தின் கரையில் பனை விதைகள் நடும் பணியினை வேளாண்மை துணை இயக்குநர் பழனிச்சாமி தலைமையேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சோலைவனம் தன்னார்வ குழுவினர் மற்றும் நடுவலூர் ஆர்.சி பாரத மாதா பள்ளி மாணவர்கள் 400 பேர் கலந்து கொண்டு நீர் தேக்கத்தின் கரையில் 15000 பனை விதைகள் நடவு செய்தனர். நிகழ்ச்சியில் தா.பழூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக், துணை வேளாண்மை அலுவலர் அனந்தராமன், உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார், அட்மா திட்ட மேலாளர் சகாதேவன் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பனை மரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

Tags : banks ,reservoir ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி தொடக்கம் நாற்று...