×

தமிழகத்துக்கு இதுவரை வந்துள்ளது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர்

ஊத்துக்கோட்டை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதையாட்டி ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜூன் 14ம் தேதி  தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் கடந்த ஜூன் 16ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டிற்கு வந்தது. தற்போது, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில், இந்த  தண்ணீர் 550 கன அடியாக வரும் நிலையில், கிருஷ்ணா தண்ணீர் நேற்று வரை தமிழகத்திற்கு 4 டிஎம்சி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. …

The post தமிழகத்துக்கு இதுவரை வந்துள்ளது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,Uthukkotta ,Chennai ,4 ,TMC Krishna Water ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...