×

திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் நடத்தும் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்புப் பேரணி ஜூலை 1ம் தேதி தொடக்கம்

திருச்சி : திருச்சிராப்பள்ளியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், அக்னிர் 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அக்னிவீர் 10ம் வகுப்பு டெக்னிகல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான ஆள்சேர்ப்பு பேரணியை 01 ஜூலை 2024 முதல் 05 ஜூலை 2024 வரை தூத்துக்குடியில் உள்ள தருவை விளையாட்டு அரங்கில் நடத்த உள்ளது.

திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி. மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது www.joinindianarmy.nic.in இல் பதிவேற்றம் செய்யப்பட்ட 12 பிப்ரவரி 2024 தேதியிட்ட பேரணி அறிவிப்பின் படி அணைத்து ஆவணங்களையும் பேரணி தளத்திற்கு கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.

ஆள்சேர்ப்பு செயல் முறை முற்றிலும் தானியங்கும், நியாயமான மற்றும் வெளிப்படையானது மற்றும் வேட்பாளர்கள்யாரையும் தேர்ச்சி பெற அல்லது பதிவு செய்ய உதவ முடியும் என்று கூறும் ஏமாற்றுக்காரர்கள் / மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகுதல் மட்டுமே தகுதிக்கு ஏற்ப அவர்களின் தேர்வை உறுதி செய்யும். விளம்பரதாரர்கள் மற்றும் முகவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை மற்றும் வேட்பாளர்கள் அத்தகைய முகவர்கள்/ஏஜென்சிகளால் ஈர்க்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் நடத்தும் அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்புப் பேரணி ஜூலை 1ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Agniveer Army Recruitment Rally ,Tiruchirappalli Army Recruitment Office ,Trichy ,Army Commission ,Agniwir Technical ,Agniwir Office ,Dinakaran ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி