×

மர்ம நோய் தாக்குதலால் கரும்பு பயிர் பாதிப்பு

திருச்செங்கோடு, செப்.11: திருச்செங்கோடு தாலுகா பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பை மர்மநோய் தாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள கொல்லப்பட்டி, விட்டம்பாளையம், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பை மர்ம நோய் தாக்கி உள்ளது. என்ன நோய் என்று விவசாயிகளுக்கு தெரியாததால், நோயை தடுக்கும் வழிமுறைகளும் தெரியவில்லை. இந்த நோயால் கரும்பின் நடுப்பகுதி காய்ந்து  மகசூல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் ஆகும்  முன், கரும்பை வெட்டிச்செல்ல சர்க்கரை ஆலைக்கு  ஆர்டர்  தரவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அரசு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sugarcane crop attack ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி