×

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

ராசபுரம், ஏப்.26: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சி பகுதியில், கைப்பந்து குழு சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி வருகிற 27, 28ம் தேதி 2 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் சென்னை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். பெண்கள் அணியினர் லீக் முறையிலும், ஆண்கள் அணி நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ₹15,000, 2ம் பரிசு ₹12000, 3ம் பரிசு பத்தாயிரமும், 4ம் பரிசு ₹8000 வழங்கப்படுகிறது. இதே போல பெண்கள் பிரிவில் முதல் பரிசாக பத்தாயிரமும், இரண்டாம் பரிசாக 8000, மூன்றாம் பரிசாக ₹6000, 4ம் பரிசாக ₹4000 வழங்கப்படுகிறது.

The post மாநில அளவிலான கைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : Rasapuram ,Pattanam ,Rasipuram ,Namakkal district ,Chennai ,Salem ,Trichy ,Coimbatore ,State Level Volleyball Tournament ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி