பருவமழை எதிரொலி சோளம் விளைச்சல் அதிகரிப்பு

தர்மபுரி, செப்.11: தர்மபுரி மாவட்டத்தில், பருவமழை காரணமாக சோளம் விளைச்சல் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம், எர்ரங்காடு, எட்டிமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோளம் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் சோளம் விளைச்சல் அதிகரித்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது, எங்களுக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தில் கடந்த ஆடி மாதத்தில் சோளம் பயிரிட்டோம். நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்தது. இதனால் சோளம் விளைச்சல் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. கடந்தாண்டு 2 மூடை சோளம் கிடைத்த நிலையில், இந்தாண்டு அதிகபட்சமாக 4 மூடை சோளம் கிடைக்கும் என கூறினர்.

Tags :
× RELATED தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை துவக்கம்