×

வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை : திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர், ஆணையர் ஆகியோரும் பங்கேற்றனர்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,’ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் அமல்படுத்தப்பட்டுவிட்டது.அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அறநிலையத்துறையின் அனைத்து அறிவிப்புகளும் விரைவில் நிறைவேற்றப்படும். இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சேகர் பாபு என்று அழைப்பதைவிட செயல் பாபு என்று அழைப்பது சிறப்பாக இருக்கும். எண் என்று சொல்வதற்கு முன்னாள் எண்ணெயாக விரைந்து வேலை செய்கிறார். 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக செயல்படுகிறார்.சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத்தொடர் முடியும் முன்பே அமலுக்கு வருவது இந்த திட்டம் தான். கோவில் நிலங்களும் சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட உள்ளன. திருக்கோவில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும்.சட்டமன்றத்தில் என்னென்ன அறிவிக்கப்பட்டுள்ளதோ அனைத்தும் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன்.அமைச்சர்களையும். அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன் என்றும் தெரிவித்தார்….

The post வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Thiruvanmiyur Darshaneeswarar temple ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு