×

வெள்ளங்கால் ஒன்றிய பள்ளியில் பழங்கால நாணயங்கள், தபால்தலை கண்காட்சி

முத்துப்பேட்டை, செப்.11:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த வௌளங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கும் துளிர் இல்லம் துவக்க விழா நடைபெற்றது . இதையொட்டி இதில் அரிய பழங்கால இந்திய “நாணயங்கள் மற்றும் தபால்தலைகள் கண்காட்சியும்” நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் உமாபதி தலைமை வகித்தார். முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, ஆசிரிய பயிற்றுனர் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முத்துப்பேட்டை வட்டார தலைவர் மகாதேவன் அறிவியல் இயக்க செயல்பாடு குறித்தும் துளிர் இல்லம் குறித்தும் அறிமுக உரையாற்றினார்.இதில் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நாணயவியல் ஆராய்சியாளருமான சுரேஷ், தான் சேகரித்து வைத்துள்ள அரிய பழங்கால இந்திய நாணயங்கள் (விளக்க குறிப்புகளுடன்) உலக நாடுகளின் நாணயங்கள் உலக நாடுகளின் தபால்தலைகளை கண்காட்சியாக அமைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கம் அளித்தார். துளிர் இல்லத்தினை வட்டாரக்கல்வி அலுவலர் சொக்கலிங்கம் திறந்து வைத்தார்.நாணய கண்காட்சியினை எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.

இதில் கலந்துக்கொண்டு பேசிய முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா கூறுகையில்: இந்நிகழ்வுகளை பார்க்கும்போது மிகப்பெரிய ஆச்சரியத்தை தருகிறது. அதேபோல் ஆசிரியர் ஒருவர் இந்த நாணயம் தபால் தலை சேகரித்து ஒரு பிரமாண்டமான கண்காட்சியை அமைத்து இருகின்றதை கண்டு பெருமையடைகிறேன் இதுபோன்ற கண்காட்சியை ஒன்றியத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் நிகழ்த்திட வேண்டும் மூட பழக்கவழக்கம் தவித்து அறிவியல் சிந்தனை வளர்க்க செயல்படுவோம் என்றார். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சோமசுந்தரம் வந்திருந்தவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி நன்றி கூறினார்.

Tags : Exhibition ,Union School ,Wellanga ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால்...