×

கரூர் ராயனூர் நடுநிலை பள்ளி அருகில் படிகள் உடைந்து சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி

கரூர், செப். 10: கரூர் ராயனூர் நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மேல்நிலை தொட்டியின் படிகள் உடைந்த நிலையில் உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இருந்து செல்லாண்டிபாளையம் செல்லும் வழியில் நடுநிலைப்பள்ளியும் இதன் அருகிலேயே அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது.

இந்த இரண்டுக்கும் நடுவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் தொட்டியின் படிகள் அனைத்தும் உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் திறந்த நிலையில் மேல்நிலைத் தொட்டி வளாகம் உள்ளதால் அடையாளம் தெரியாத பலர் இரவு நேரங்களில் இந்த பகுதியில் உலாவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொட்டியின் படிகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும், தொட்டியை சுற்றிலும் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என இந்த பகுதியினர் பல மாதங்களாக கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தொட்டி வளாகம் இருக்கும் பகுதியை பார்வையிட்டு, படிகளை சீரமைத்து, சுற்றுச்சுவர் எழுப்ப தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : middle school ,Karur Rayanur ,
× RELATED குளத்தூரில் சிறுவர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம்