×

95 அடி உயரபெரியார் சிலை, அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், நூலகம்.. திருச்சியில் அமையும் பிரம்மாண்ட பெரியார் உலகம்

சென்னை : உலகின் மிக உயரமான பெரியார் சிலையுடன் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க உள்ளதாக பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுகனூர், இங்கு 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க இருப்பதாக திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை அறிவித்துள்ளது. அங்கு 40 அடி உயர பீடத்தில் 95 அடி உயரம் கொண்டுள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலை ஒன்று அமைய உள்ளது. 133 அடி உயரத்தில் அமையும் உலகின் மிக உயரமான பெரியார் சிலையாக இது அமைகிறது. இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி – ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகமும் மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அறிவியல், கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் ஆகியவனவும் அங்கு அமைக்கப்பட உள்ளன. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.  …

The post 95 அடி உயரபெரியார் சிலை, அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், நூலகம்.. திருச்சியில் அமையும் பிரம்மாண்ட பெரியார் உலகம் appeared first on Dinakaran.

Tags : Periyar ,Trichy ,Chennai ,Sirukanur ,
× RELATED லால்குடி அருகே மீன் பிடிப்பதில்...