×

வெங்கக்கல்பட்டி பகுதியில் தொடர் மழை பாறைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை அருந்தி தாகம் தீர்க்கும் கால்நடைகள்

கரூர் : கரூர் மாவட்டம் வெங்கக்கல்பட்டி அருகே தொடர் மழையின் காரணமாக பாறைக்கு மத்தியில் குளம் போல தேங்கியுள்ள நீரை ஆர்வத்துடன் கால்நடைகள் பருகி தாகம் தீர்த்து வருகின்றன.கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதக்கி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகள் தண்ணீரால் நிரம்பி வருகிறது. கிராமப்பகுதிகளில் ஆடு, மாடுகளை வயல் மற்றும் தோட்டப்பகுதிகளுக்கு ஏராளமானோர் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்று வருகின்றனர்.அந்த சமயத்தில் குளம் குட்டைகளில் தேங்கியுள்ள நீரை கால்நடைகள் ஆர்வத்துடன் குடித்துச் செல்லும் நிகழ்வுகள் ஆண்டாண்டு காலம் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், பல ஆண்டுகளாக மழைகுறைவு போன்ற காரணங்களால் சாதாரண நிலையில் உள்ள குளங்களில் கூட தண்ணீர் நிற்காத நிலைதான் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக குளம், குட்டைகள் மட்டுமின்றி, பாறைகளுக்கு மத்தியில் உள்ள பள்ளங்களிலும் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது.அதுபோல, கரூர் வெங்ககல்பட்டி அருகே செல்லும் திருச்சி பைபாஸ் சாலையோரம் உள்ள ஒரு காட்டுப்பகுதியில், அங்குள்ள ஒரு பாறைக்கு மத்தியில் தேங்கியிருந்த மழைநீரை, மேய்ச்சலுக்கு வந்த ஆடுகள் மிகுந்த ஆவலுடன், தாகத்துடன் தண்ணீரை பருகி சென்றன என்பது குறிப்பிடத்தக்கது….

The post வெங்கக்கல்பட்டி பகுதியில் தொடர் மழை பாறைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை அருந்தி தாகம் தீர்க்கும் கால்நடைகள் appeared first on Dinakaran.

Tags : Venkakalpatti ,Karur ,Karur district ,Dinakaran ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...