தர்மபுரி, ஜூலை 16: தர்மபுரி மாவட்டம் சின்னதாய்பட்டி, கெட்டுபட்டி, சின்னகாம்பட்டி கிராமங்களில் இளைஞர்கள் ஒருங்கிணைந்து நீர் மேலாண்மை, தூய்மை பாரத் திட்டப் பணிகளை மேற்கொண்டனர்.தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் சின்னதாய்பட்டி கிராமத்தில், நீர்மேலாண்மை மற்றும் தூய்மை பாரத் திட்டப்பணிகள் நடந்தது. முகாமை தர்மபுரி மாவட்ட நேரு இளையோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் தொடங்கி வைத்தார். அம்பேத்கர் இளைஞர் மன்றத் தலைவர் பரமேஷ், செயலர் ஆனந்த செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சின்னகாம்பட்டியில் அப்துல் கலாம் இளைஞர் மன்றத் தலைவர் ராஜலிங்கம், செயலர் ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீர் நிலைகளை தூய்மை செய்தல், நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுபொருட்களை வாங்கி, மக்கும் குப்பைகளாகவும், பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை பூமியில் புதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.










