×

அண்ணா பெயரை எப்படி விடலாம்? காங். உறுப்பினருக்கு துரைமுருகன் கேள்வி

சென்னை: சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, ஈரோடு கிழக்கு இ.திருமகன் ஈவெரா (காங்கிரஸ்) பேசும்போது, பல்வேறு தலைவர்களை புகழ்ந்து பேசி தனது கன்னிப்பேச்சு உரையை தொடங்கினார். அவர் பேசி முடித்ததும் அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், ‘‘சட்டப்பேரவை உறுப்பினர் கன்னிப்பேச்சு பேசுகிறார் என்று குறுக்கிடவில்லை. அவர் யார் என்றால், ஈ.வி.கே.எஸ்.சம்பத்தின் பேரன். அவர் பேசும்போது சொன்னார். ஓமந்தூர் ராமசாமி, காமராஜர், கலைஞர் இவர்கள் எல்லாம் இருந்த அவையில் நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொன்னார். ஓமந்தூராரை அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. ஆனால், அண்ணாவை ஞாபகம் வரவில்லை. அதை அவர் வேண்டும் என்று விட்டாரா அல்லது மறதியால் விட்டாரா என்று தெரியவில்லை. அவர் மறந்து விட்டு இருந்தால் மன்னித்து விடலாம். வேண்டுமென்று விட்டு இருந்தால் விவாதத்திற்கு உரியது. எப்படி’’ என்று கேட்டார்.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): கலைஞரை சொன்னால், அண்ணாவை சொல்வது போன்று, அண்ணாவை சொன்னால் அதை தலைவர் கலைஞரை சொன்னது போல் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இ.திருமகன் ஈவெரா (காங்கிரஸ்): தவறுதலாக விடுபட்டு விட்டது. அதுமட்டுமின்றி, அண்ணா மீது எனக்கு பெரிய அபிப்ராயம் உண்டு. அவர் எழுதிய ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற புத்தகத்தை நான் படித்து இருக்கிறேன். உங்களிடம் எல்லாம் நான் விவாதம் செய்ய முடியாது என்று பதில் அளித்தார்….

The post அண்ணா பெயரை எப்படி விடலாம்? காங். உறுப்பினருக்கு துரைமுருகன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Anna ,Kong. Duraimurugan ,Chennai ,Legislative Assembly ,Erode East ,Mr. ,E. Thirumakan Evera ,Congress ,Kong. ,Duraimurugan ,Dinakaran ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு