×

கேரளாவை இணைக்கும் சாலைகளில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் சிறப்பு மருத்துவக் குழு கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும்

* நிபா வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும்* பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்சென்னை: கேரளாவை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு மருத்துவக்குழு கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும். ேமலும் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை முறையாக தனிமைப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 23க்கும் மேற்பட்டவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 12 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளன். நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு செய்யப்பட வேண்டிய பரிசோதனை குறித்தும் தேவையான தடுப்பு நடவடிக்கை குறித்தும் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதார இயக்குனர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கப்பட்டால் அவர்கள் கோமா நிலைக்கு செல்லக்கூடும். மேலும் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரசால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கேரளாவில் இருந்து தமிழகம் வருகிறவர்களில் நிபா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். கேரளாவின் எல்லை பகுதியில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கேரளாவை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு மருத்துவக் குழு கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும். கேரளாவில் இருந்து வருகிறவர்களில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களை முறையாக தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் ரத்தம், சிறுநீர், சளி மாதிரிகள், முதுகு தண்டுவட நீர் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் முதற்கட்ட ஆய்வுக்கு சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆய்வின் முடிவை உறுதி செய்ய புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். நிபா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து 21 நாள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கேரளாவை இணைக்கும் சாலைகளில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் சிறப்பு மருத்துவக் குழு கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Keralava ,Director of ,Public ,Health ,Kerala ,Kerla ,Dinakaran ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...