ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

தர்மபுரி, ஜூன் 25:  நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வரதராஜ்(45). இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், 4 பயணிகளை ஏற்றி கொண்டு, தோக்கம்பட்டியிலிருந்து நத்தஅள்ளிக்கு சென்றுள்ளார். இண்டூர் அருகே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வரதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், இடிபாடுகளில் சிக்கிய 4 பேரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின் பேரில், நல்லம்பள்ளி போலீசார், வரதராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து