×

நகராட்சி பள்ளியில் புதியதாக சேர்ந்த குழந்தைகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 25:கிருஷ்ணகிரி அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், புதியதாக சேர்ந்த 129 குழந்தைகளுக்கு பூச்செண்டு மற்றும் பென்சில் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஏப்ரல், மே மாதங்களில் ஆசிரியர் பயிற்றுநர்கள் உதவியுடன் தீவிர மாணவர் சேர்க்கை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2019-20ம் கல்வியாண்டில் எல்கேஜி வகுப்பில் 27 மாணவ, மாணவிகளும், யுகேஜி வகுப்பில் 34 பேர், முதல் வகுப்பில் 24 பேர், இரண்டாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 44 பேர் மற்றும் 12 மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 129 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். புதியதாக சேர்ந்த மாணவ, மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதியதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பூச்செண்டு மற்றும் பென்சில்களை வழங்கி வரவேற்றார். நிகழ்ச்சியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் அருண்குமார் பங்கேற்று, அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை பாரதி மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.


Tags : Newcomers ,school ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...