×

பாடாலூர் அருகே நாய் கடித்து குதறியதில் மான் பலி

பாடாலூர், ஜூன் 25: பாடாலூர் அருகே உள்ள காரை கிராமத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 50க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக வசித்து வருகிறது. நேற்று காலை அந்த ஏரி பகுதியில் ஒரு மான், நாய் கடித்த நிலையில் உயிருக்கு போராடி வந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், அந்த மானை தூக்கி வந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அந்த மான், வனத்துறையினர் வருவதற்கு முன்பு இறந்து விட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வனக்காப்பாளர் திருநாவுக்கரசு, மான் உடலை மீட்டு செட்டிகுளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இறந்துபோன ஆண் மானுக்கு 2 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏரியில் இறந்து கிடந்த மான்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தின் அருகே பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஒரு மான் இறந்த நிலையில் கிடந்தது.இதை பார்த்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் சுரேசுக்கு தகவல் அளித்தனர். அவர் வனத்துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், இறந்த மானை தூக்கி சென்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மான்கள் தண்ணீர் தேடி வெளியில் வரும்போது விபத்திலும், நாய்கள் கடித்து இறந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் பகுதியில் அதற்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




Tags : Patalloor ,
× RELATED வீட்டுக்கு இணைப்பு தராமல்...