×

வேதாரண்யம் அருகே நாலுவேதபதி தொழில் அதிபர் பாண்டியன் இல்ல மணவிழா

வேதாரண்யம், ஜூன் 25: வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி சமூக ஆர்வலரும், தொழில் அதிபருமான டாக்டர் ஆர்.எஸ்.பாண்டியன் மகன் பொறியாளர் ஞானஉதயத்திற்கும், கோவில்பத்து பத்மநாபன் மகள் ஹேமலாதாவிற்கும் கடந்த 23ம் தேதி திருமணம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் அமைச்சர்கள் மதிவாணன், ஜெயபால், முன்னாள் எம்எல்ஏக்கள் வேதரத்தினம், காமராஜ், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜன், கராத்தே மாஸ்டர் வாசுதேவன், தொழிலதிபர் ராமசாமி, வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தங்கமுத்துகிருஷ்ணன், சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில தலைவர் சிவஇளங்கோஸ பொதுசெயலாளார் செந்தில் ஆறுமுகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள், தலைஞாயிறு அவை.பாலசுப்பிரமணியன், தேத்தாகுடி வழக்கறிஞர் கிரிதரன், ஓய்வுபெற்ற விடுதி காப்பாளர் பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி காந்த் மற்றும் முன்னாள் ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகள், சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Tags : Nanduvedapathi ,Vedaranyam ,Pandian Home Wedding Ceremony ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...