அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசின் கவனக் குறைவாலும், உள்ளாட்சித் துறை அமைச்சரின் அலட்சியத்தாலும், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அன்றாடம் பெண்களும், ஆண்களும், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் ஆகியோர் காலி குடங்களுடன் குடிநீருக்காக அலைந்து பரிதவிப்பதும், தங்கும் விடுதிகள் மூடப்படுவதும், மக்கள் வீடுகளை காலி செய்வதும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்த வண்ணம் உள்ளன.

இதை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தில் நாளை (22ம் தேதி) காலை 11 மணி அளவில், பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள், இந்நாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், தொமுச நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,protests ,government ,AIADMK ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு