×

கால்நடைத்துறையில் பணியாளர் பற்றாக்குறை கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதில் சிக்கல்

தேனி, ஜூன் 19: தேனி மாவட்ட கால்நடைத்துறையில் டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி ஆகிய மூன்று நகராட்சிகளில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. தவிர மாவட்டம் முழுவதும் 53 கால்நடை மருந்தகங்கள், 54 கால்நடை கிளை நிலையங்கள் உள்ளன. கால்நடை மருத்துவமனைகளில் இரண்டு டாக்டர்களுக்கு பதிலாக தலா ஒரு டாக்டர் மட்டுமே பணிபுரிகின்றனர். கால்நடை கிளை நிலையங்களில் தலா ஒரு கால்நடை ஆய்வாளர் வீதம் 54 பேர் தேவைப்படுகினறனர். ஆனால் இவர்களில் 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒருவரே இரண்டு அல்லது மூன்று பணியிடங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் 20க்கும் மேல் காலியாக உள்ளன. இதனால் கால்நடைத்துறையின் அவசியப்பணிகளான தடுப்பூசி போடுதல், சினை ஊசி போடுதல், கால்நடைகளுக்கு மருந்து கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி