வீட்டின் பூட்டை உடைக்காமல் நகைகளை திருடிய ஆசாமிகள்

சிங்கம்புணரி, ஜூன் 19: சிங்கம்புணரி அருகே வீட்டில் இருந்த ஏழரை பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். சிங்கம்புணரி அருகே திருக்களாப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜேந்திரன்(66 ). விவசாயி. இவர் நேற்று வீட்டின் முன்பு உள்ள வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் 11 மணி அளவில் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றார். அப்போது வீட்டின் சாவியை தலையணைக்கு கீழே வைத்துவிட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், சாவியை எடுத்து பூட்டை திறந்து வீட்டிற்குள் நுழைந்தனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஏழரை பவுன் மதிப்பிலான செயின், தோடு ஆகியவற்றை திருடினர். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் சாவியை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு தப்பினர். வீட்டிற்கு வந்த ராஜேந்திரன், சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்றபோது, பீரோவில் இருந்த நகைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எஸ்வி மங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Aasamis ,house ,
× RELATED அம்பாசமுத்திரம் அருகில்...