×

டூவீலரில் மது விற்றவர் கைது 86 பாட்டில்கள் பறிமுதல்


திருமங்கலம், ஜூன் 19: திருமங்கலம் அருகே டூவிலரில் மது விற்றவரை போலீசார் கைது செய்து 86 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டி டாஸ்மாக் கடை அருகே டூவிலரில் ஒருவர் மது விற்பனை செய்வதாக எஸ்பி தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு டூவிலரில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்த புங்கன்குளத்தை சேர்ந்த கணேசனை(34) போலீசார் கைது செய்தனர். 86 மதுபாட்டில்கள் மற்றும் டூவிலரை பறிமுதல் செய்தனர்.

Tags : seller ,
× RELATED டாஸ்மாக்கில் ரூ.150-க்கு கீழே...