×

வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் மானாவாரி மேம்பாட்டு இயக்க விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

தர்மபுரி, ஜூன் 19: பென்னாகரம் வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் கலந்தாய்வு கூட்டம், தொன்னகுட்டனஅள்ளி தொகுப்பில் சீலநாயக்கனூரில் நடந்தது. கூட்டத்திற்கு பென்னாகரம் வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி கலந்து கொண்டு பேசுகையில், மானாவாரி குழு மேம்பாட்டு திட்டங்களான ஏக்கருக்கு ₹500 உழவு மானியம் வழங்குதல், மானாவாரி விவசாயிகளுக்கு தேவையான விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுவது குறித்தும்,  பயிர்காப்பீடு, சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர்பாசனம் அமைத்தல், மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு தாக்குதலை சமாளிப்பது குறித்தும் விளக்கி பேசினார்.
வேளாண் அலுவலர் மணிவண்ணன் பேசுகையில், விதை நேர்த்தி செய்வதனால் ஏற்படும் நன்மைகள், விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெறுவது எவ்வாறு என விளக்கினார். இதே போல், பள்ளிப்பட்டி தொகுப்பில் வேலம்பட்டி கிராமத்தில் நடந்த கூட்டத்தில், துணை வேளாண் அலுவலர் அருணகிரி, வேளாண் உதவி அலுவலர் கோகிலா, சொட்டுநீர் பாசன கருவிகள் விற்பனையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rainforest Development Farmers Consultation Meeting ,Agricultural Extension Center ,
× RELATED பழநி அருகே நெல் வயல்களில் வேளாண்துறையினர் ஆய்வு