×

 விஜய வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரூர், ஜூன் 19: அரூர் அருகே எச்.தொட்டம்பட்டியில் உள்ள  விஜய வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அரூர் தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். இதில், தீ விபத்து ஏற்படும் போது பாதுகாப்புடன் செயலாற்றுவது எவ்வாறு, மனிதர்கள், விலங்குகள் கிணற்றில் விழுந்தால் மீட்பது, மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர். இதில் பள்ளி தாளாளர் தமிழ்மணி, பள்ளி முதல்வர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Wijaya Vidyalaya Matriculation School ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா