×

ராதாபுரத்தில் திறக்கப்படாத ஆதார் மையம்

ராதாபுரம், ஜூன் 19: ராதாபுரத்தில் மூடிக்கிடக்கும் ஆதார் மையத்தை திறக்க போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் நீண்ட நாட்களாக செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. இதனால் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு தாலுகா வரும் மக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. தற்போது ஆதார் எண் கட்டாய தேைவ என்பதால், அதனை பெற தவறியவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் மையம் மூடியே கிடப்பதால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆரம்பத்தில் அரசே சிறப்பு முகாம்களை நடத்தி ஆதார் எண்களை வழங்கியது. பின்னர் தனியார் இன்டர்நெட் சென்டர்களிலும் தங்களது ஆதாரை பதிவு செய்யலாம் என இணைய வழியையும், செயலியையும் உருவாக்கி வெளியிட்டது. இதில் தவறுகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டி தனியாரிடம் ஆதார் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

தாலுகா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் ஆதார் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பெரும்பாலான தபால் நிலையங்களில் ஊழியர்களுக்கு போதிய பயற்சி இல்லை எனக்கூறி ஆதார் சேவை நடைபெறாது என கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.ராதாபுரம் தாலுகா அலுவலகத்திலும் போதிய ஊழியர்கள் இல்லை என்ற காரணத்தால் ஆதார் சேவை மையம் தொடர்ந்து மூடிக் கிடக்கிறது. தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் கிராம மக்களின் நிலை அறிந்து மூடிக்கிடக்கும் ஆதார் சேவை மையத்தை கூடுதலாக ஊழியர்களை நியமித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதேபோல் ராதாபுரம் வட்டார தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Tags : Aadhaar Center ,Radhapuram ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...