×

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறும் ஆண்டி அம்பலம் எம்எல்ஏ உறுதி

நத்தம், ஜூன் 18: உள்ளாட்சி தேர்தலில் நத்தம் தொகுதியில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும் என்று ஆண்டிஅம்பலம் தெரிவித்தார்.நத்தத்தில் திமுக சார்பில் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பிரச்சாரம் நடந்தது. ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், வெள்ளைச்சாமி, தர்மராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துகுமாரசாமி வரவேற்றார். ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக வருவார். மேலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நாம் மக்களுக்கு சேவை செய்திட அதற்கு அடிப்படையான உள்ளாட்சி தேர்தலில் நத்தம் தொகுதியில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும்’’ என்றார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் சாதுராஜன், கந்திலி கரிகாலன் உள்ளிட்ட பலரும் பேசினர். இதில் முன்னாள் பொருளாளர் கமால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், முன்னாள் ஒன்றிய தலைவர் ஜெயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் இஸ்மாயில், கதிரவன் உள்ளிட்ட திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைச்செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.


Tags : MLA ,DMK ,elections ,everywhere ,
× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா