ராயகிரியில் முப்பெரும் விழா மக்களவை தேர்தலில் திமுகவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு

சிவகிரி, ஜூன்18:   மக்களவைத் தேர்தலில்  திமுகவிற்கு அனைத்து தரப்பினரும் அமோக ஆதரவு அளித்துள்ளனர் என்று  ராயகிரியில் நடந்த திமுக முப்பெரும்விழா பொதுக் கூட்டத்தில் நெல்லை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசினார். கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா, தென்காசி மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா,  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டுவிழா ஆகிய முப்பெரும்விழா பொதுக்கூட்டம் ராயகிரியில் பேரூர் கழக திமுக சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பொன்முத்தையா பாண்டியன் தலைமை வகித்தார். நகரச்செயலாளர்கள் செண்பகவிநாயகம் (சிவகிரி), சரவணன்(வாசுதேவநல்லூர்), விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துராமர், துரைச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தளர். நகர இளைஞரணி அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்ராஜ் தொகுத்து வழங்கினார்.

மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நலிந்தோர்களுக்கு உதவித்திட்டங்களையும் அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினர். விழாவில் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன் பேசுகையில், ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் திமுகவிற்கு அமோக ஆதரவளித்துள்ளனர். திமுக கூட்டணி 53 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் மாடசாமி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பூமிநாதன், வீரமணி, கலை இலக்கியஅணி மாவட்ட துணை அமைப்பாளர் நல்லசிவன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணக்குமார், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜகாந்த், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர்  மெடிக்கல் சுந்தர், மகளிரணி மாவட்ட துணைஅமைப்பாளர் கிருஷ்ண லீலா, மாவட்ட பிரதிநிதிகள் மைதீன்கனி, அன்புச்செல்வன், சொர்ணராஜ், சீமோன் கவுதம், வழக்கறிஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் வன்னியராஜா, தொகுதி தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் கிப்சன், கருத்தப்பாண்டியன், ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை ராயகிரி பேரூர் கழகச் செயலாளர் கேடிசி குருசாமி செய்திருந்தார். அவைத்தலைவர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

Tags : parties ,elections ,DMK ,Lok Sabha ,
× RELATED பல்வேறு கட்சியை சேர்ந்த 300க்கும்...