×

விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்கள், வெறி நாய்கள்

விருதுநகர், ஜூன் 14: விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் கூட்டம், கூட்டமாக திரியும் தெரு, வெறி நாய்களால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நகராட்சி பகுதி மற்றும் சுற்றி உள்ள ரோசல்பட்டி, சிவஞானபுரம், கூரைக்குண்டு, பாவாலி ஊராட்சிகளில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிமான மக்கள் குடியிருக்கின்றனர். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 4 ஆயிரத்திற்கும் அதிமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.

கோழி இறைச்சி கழிவு, ஆட்டு இறைச்சி கழிவுகளை தின்பதற்கு போட்டி போடுவதும், இனச்சேர்க்கைக்காக கூட்டம், கூட்டமாக திரியும் போதும் இடையில் சிக்கும் குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரையும் கடித்து பதம் பார்த்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், பெண்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை உருவாகி வருகிறது.

தெரு நாய்கள் கடித்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தினசர் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். தெரு நாய்களை பிடித்து கு.க சிகிச்சை செய்ய அரசு கடந்த 10 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் தெரு நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் கலெக்டர் விருப்ப நிதி, அல்லது நிறுவனங்களிடம் நிதி பெற்று தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Meetings ,areas ,Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...