×

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்தால் பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்ககோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூன் 14: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்ததால் தொழிலாளர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு தடுக்ககோரி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிற்றம்பலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் துரைசாமி, துணை செயலாளர் அகஸ்டின், கட்டுமான தொழிற்சங்க செயலாளர் கணேசன், சாலையோர வியாபாரிகள் சங்க பொது செயலாளர் ரங்கராஜ், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமையை நிலைநாட்டும் தொழிலாளர் மீதான பழிவாங்கல்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய சட்டங்களை அவமதிக்கும் முதலாளிகளுக்கு துணைபோகக்கூடாது. பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த முறையை கைவிட்டு நேரடியாக நகராட்சி நிர்வாகமே பிரதி மாதம் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமேகலை, சிஐடியூ ஆட்டோ சங்க மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம், மாநகராட்சி துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Tags : Demonstration ,union ,revenge ,government ,enterprises ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...