×

திருச்செங்கோட்டில் ஜல்லி கொட்டியும் சாலை அமைக்காததால் பொதுமக்கள் அவதி

திருச்செங்கோடு, ஜூன் 14: திருச்செங்கோடு நகரின் மையத்தில், காவல் நிலையத்தின் எதிர்புறமிருந்து நந்தவனம் நோக்கி செல்லும் சாலையை சீரமைப்பதற்காக, சாலை தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இதனால், பள்ளிபாளையம் சாலையிலிருந்து, பரமத்தி சாலைக்கு வரும் இணைப்பு சாலையை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களாகியும், சாலை அமைக்காததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். எநவே, விரைவில் நடவடிக்கை எடுத்து இதனை தார்சாலையாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், கூட்டப்பள்ளி குடித்தெருவிலிருந்து கொட்டக்காடு செல்லும் தார்சாலை உரிய பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அந்த வழியாக வாகனங்களில் செல்வதில், மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jalli Kotti ,
× RELATED டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு...