×

காரிமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம், ஜூன் 14: காரிமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. காரிமங்கலம் அடுத்த கிட்டேசம்பட்டியில் பாலகணபதி, மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரர் பச்சையம்மன் உட்பட 6 கோயில்களின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம், சிறப்பு யாகசாலை நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 8.30 மணியளவில், 6 சுவாமிகளுக்கும் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

இதில் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(14ம் தேதி) முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Mariyamman Temple Kumbabisheka Festival ,Kalimangalam ,
× RELATED காரிமங்கலம் அருகே ேவன் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்